இந்தியா முழுவதும் இடைத்தேர்தல்களில் பா.ஜ., வெற்றி – தொண்டர்கள் கொண்டாட்டம்

இடைத்தேர்தல் நடைபெற்ற பல மாநிலங்களில் பா.ஜ..,வே பா.ஜ., வெற்றி வருவது அக்கட்சியினர்… தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பீஹார் மாநிலத்தில் சட்டசபை தேர்தலும் மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் இடைத்தேர்தலும் நடைபெற்று அதற்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (நவ.,10) நடந்து வருகிறது. இதில் பீஹாரில் பா.ஜ., அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தள கட்சி கூட்டணி பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களுடன் முன்னிலை வகித்து வருகிறது. ஹிந்தி பேசும் மாநிலங்களில் பீஹாரில் மட்டும் தனிப்பெரும் கட்சியாக இல்லாமல் இருந்த பா.ஜ., இன்றைக்கு நிதிஷ் கட்சியை (47) காட்டிலும் கூடுதல் இடங்களில் (72) முன்னிலை பெற்று முதல் பெரிய கட்சியாக பாஜ., உருவெடுத்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், மத்தியப் பிரதேசத்தில் 28 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பா.ஜ., 19 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 8 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன.

குஜராத்தில் 8 தொகுதிகளுக்கும், கர்நாடகாவில் 2 தொகுதிகளுக்கும், தெலுங்கானாவில் ஒரு தொகுதிக்கும் நடந்த இடைத்தேர்தல் அனைத்திலுமே பா.ஜ.,வே முன்னிலை வகித்து வருகிறது.
அதேபோல உ.பி.,யில் 8ல் 5 இடங்களிலும், மணிப்பூரில் 5ல் 4 இடங்களிலும், ஜார்க்கண்டில் 2ல் ஒரு இடத்திலும் பா.ஜ.,வே முன்னிலையில் உள்ளன. இடைத்தேர்தல்களில் பா.ஜ.,வின் வெற்றிமுகம் அக்கட்சியினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.