இந்தியா மானேசரோவர் யாத்திரைக்கான சாலைப்பணியை துவைக்கியது

கைலாஷ் மானேசரோவர் யாத்திரை செல்லும் இந்திய யாத்ரீகர்களுக்காக தங்கள் நாட்டு எல்லையில் சாலைப்பணி மேற்கொண்ட இந்தியாவிற்கு நேபாளம் கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்தியா சீனா எல்லைப்பகுதியான உத்தர்கண்ட் மாநிலம் தர்ச்சூலா என்ற பகுதியிலிருந்து கைலாஷ் மானேசரோவர் யாத்திரை செல்லும் இந்திய யாத்ரீகர்களுக்காக 80 கி.மீ. தொலைவிற்கு சாலைப்பணியை இந்திய அரசு கடந்த வெள்ளியன்று துவக்கியுள்ளது.

இப்பணிகள் நேபாளம் நாட்டின் லைப்பூலோக் கணவாய் வழியாக சாலை போடப்பட்டு பணிகள் மேற்கொண்டு வருவதாகவும், நேபாளத்திற்கு சொந்தமான பகுதிகளில் சாலைப்பணிகள் மேற்கொண்டு வருவதற்கு நேபாளம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்தியாவிற்கான நேபாளம் தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்தது.

நேபாளம் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் டுவிட்டரில் வெளியிட்டிருப்பதாவது:

இந்தியாவின் இந்த செயல் 1816-ம் ஆண்டு ஒப்பந்தத்தை மீறியதாகவும், இந்தியாவின் ஒரு தலைபட்சமான செயல் சரியல்ல. எல்லை பிரச்னையை இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா முயற்சிக்க வேண்டும். என்றது.
இந்தியா தரப்பில் கூறுகையில், உத்தர்கண்ட் மாநிலத்தில் உள்ள பித்தூர்கார் மாவட்டம் இந்திய எல்லைக்குட்டப்பட்டது. இந்தியாவிற்கு சொந்தமான பகுதியில், தான் சாலைபணிகள் நடக்கின்றன என விளக்கம் அளித்துள்ளது.