- கிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா?
- மம்தாவால எலக்ட்ரிக் ஸ்கோவ்ட்டரும் ஓட்ட முடியல பாவம் !!
- தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி
- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே

இந்தியா சென்ற மகிந்த ராஜபக்சாவை புதுடெல்லியில் சுப்பிரமணிய சுவாமி வரவேற்றார்
கடந்த திங்கட்கிழமை மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவிற்கு சென்றபோது புதுடில்லி விமான நிலையத்தில் வைத்து அவரை பாரதிய ஜனதா கட்சியின் சிரேஸ்ட தலைவர் சுப்ரமணியம் சுவாமி வரவேற்றுள்ளார்.
இந்திய பாரதிய ஜனதா கட்சியின் அழைப்பின் பேரிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சா இந்தியா சென்றார் என்று கொழும்பிலிருந்து எமக்கு கிடைத்த செய்தி ஒன்று தெரிவிக்கின்றது
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மகிந்த ராஜபக்சா இலங்கையில் தற்போது ஆட்சி நடத்தும் நல்லிணக்க அரசாங்கத்தின் ஜனாதிபதியும் பிரதமரும் மக்கள் மத்தியில் தங்கள் செல்வாக்கை இழந்துள்ளார்கள் என்று குறிப்பிட்டார்.
சுப்பிரமணிய சுவாமி மகிந்தாவை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் வகையில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகக் கூறப்படுகின்றது. இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கப்பட்டவையாகும்.