இந்தியாவை தோற்கடிப்பதன் மூலம் பாகிஸ்தான் வரலாற்றை உருவாக்க முடியும்- மொயின் கான்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மொயின் கான், தற்போது உள்ள பாகிஸ்தான் அணி உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவை தோற்கடிக்கும் என நம்புகிறார்.

இதுவரை உலகக் கோப்பை ஆறு போட்டிகளில் பாகிஸ்தான் இந்தியாவை தோற்கடித்தது இல்லை. உலகக் கோப்பை போட்டியில் ஜூன் 16-ந்தேதி ஓல்ட் டிராபோர்டில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இது குறித்து பாகிஸ்தான் ஜிடிவிக்கு அளித்த பேட்டியில் மொயின் கான் கூறும் போது,

உலகக் கோப்பையில் இந்தியாவுடன் முதல் வெற்றியை பதிவு செய்வதில் தற்போதைய அணி மிகவும் திறமை வாய்ந்தது. சாம்பியன்ஸ் டிராபியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் வீரர்கள் (இந்தியா) தோற்கடித்ததால் நான் இதைச் சொல்கிறேன். ஜூன் மாதத்தில் இங்கிலாந்தின் தட்பவெட்ப நிலை பந்து வீச்சாளர்களுக்கு சிறந்ததாக இருக்கும்.

இது மிகவும் சுவாரஸ்யமான உலகக் கோப்பையாக இருக்க வேண்டும், இந்தியாவை பாகிஸ்தான் வெல்ல வேண்டும் என விரும்புகிறேன். தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியதன் பின்னர் நமது வீரரகள் சிறப்பாக ஆடி வருகின்றனர்.

கடந்த பல ஆண்டுகளாக இங்கிலாந்தில் பாகிஸ்தான் நன்றாக விளையாடி வருகிறது. மே-ஜூன் வானிலை எதிர்பாராதது. ஆடுகளங்களில் ஈரப்பதம் இருக்கும்.

அணிக்கு தலைமை தாங்கும் சர்பராஸை நான் அறிவேன். ஏனென்றால் அவர் ஒரு இளையவர், நான் அவருக்கு பயிற்சி அளித்திருக்கிறேன் என கூறினார்.