- விடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது !!
- நடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் அனுமதி
- ஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் !!
- கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்
- ‛ஸ்புட்னிக் வி' தடுப்பூசியை பயன்படுத்த நிபுணர் குழு பரிந்துரை

இந்தியாவை தொடர்ந்து பூடானிலும் அத்துமீறும் சீனா !!
இந்தியாவுடனான எல்லைப் பிரச்னையை தொடர்ந்து, சீனா தற்போது, பூடான் உடனும் எல்லைப் பிரச்னையில் ஈடுபட்டுள்ளது. சீனா பரந்துவிரிந்த நாடு என்பதால், பல்வேறு நாடுகளுடன் எல்லையை பகிர்ந்துள்ளது; எல்லையில் உள்ள சில நாடுகளுடன் எல்லைப் பிரச்னை தொடர்பாக மோதியும் வருகிறது. குறிப்பாக, தென் சீனக்கடல் முதல் லடாக் வரை உள்ள பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதில் சமீபத்தில், இந்தியாவுடனான எல்லைப் பிரச்னை அதிக பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சீனா தற்போது பூடான் உடனும் எல்லைப் பிரச்னையில் ஈடுபட்டுள்ளது.
சமீபத்தில், உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி கவுன்சிலின், 58வது கூட்டம் நடந்தது. இதில் சீனா, பூடானில் அமைந்துள்ள சாக்டெங் வனவிலங்கு சரணாலயத்தில் நடைபெற உள்ள புதிய திட்டம் ஒன்றுக்கு நிதி ஒதுக்குவதை தடுத்து நிறுத்த முயன்றது. அதோடு அந்த நிலப்பகுதி ‘சர்ச்சைக்கு உரியது’ என்றும் கூறியுள்ளது.
பூடான் – சீனா எல்லையில் அமைந்துள்ள சாக்டெங் சரணாலயத்தின் நிலப்பகுதி தொடர்பான எந்தப் பிரச்னையும், கடந்த காலங்களில் ஏற்படவில்லை. இதனால், சீனாவின் இத்தகைய நிலைப்பாடுகள் பலருக்கும் அதிருப்தி அளித்துள்ளது. பூடானில் சீனாவுக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று, சீனாவின் இந்த சர்ச்சைக்குரிய பதிவுக்கு, ‘சாக்டெங் வனவிலங்கு சரணாலயம் பூடானின் ஒருங்கிணைந்த மற்றும் இறையாண்மைக்கு உரிய பகுதியாகும்’ என, பூடான் அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.