Go to ...
Canada Uthayan Tamil Weekly
* மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டிக்கு எதிரான வசனங்களை நீக்க முடிவு    * காங்கிரஸ் ஆட்சியில் உம்மன்சாண்டி பலாத்காரம் செய்தவர்கள் நடவடிக்கை:முதல்வர் பினராய் விஜயனுக்கு சரிதா நாயர்    * அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட பாக். தீவிரவாதி    * தற்கொலை படை தாக்குதல் : ஆப்கன் வீரர்கள் 43 பேர் பலி
Arrow
Arrow
Slider
Canada Uthayan on YouTubeCanada Uthayan on LinkedInCanada Uthayan on PinterestRSS Feed

Friday, October 20, 2017

இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் 189 ரன் எடுத்தது


இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நேற்று நடந்தது. இந்திய அணியில் மூன்று மாற்றமாக யுவராஜ்சிங், அஸ்வின், புவனேஷ்வர்குமார் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து 4-வது முறையாக டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீசுக்கு ஓரளவு நல்ல தொடக்கம் கிடைத்த போதிலும் மிடில் ஓவர்களில் ஒரேயடியாக தடுமாறிப்போனார்கள். விக்கெட்டை தக்க வைத்துக்கொள்வதில் கவனம் செலுத்திய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அதிரடியாக ரன் சேர்ப்பதில் முனைப்பே காட்டவில்லை. இதனால் ஆமைவேகத்தில் நகர்ந்த ரன்வேகம் கடைசி வரை அப்படியே தொடர்ந்து விட்டது.

50 ஓவர்கள் முழுமையாக ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட்டுக்கு 189 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. கடைசி 83 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. தொடக்க ஆட்டக்காரர்கள் எவின் லீவிஸ், கைல் ஹோப் தலா 35 ரன்கள் எடுத்ததே அந்த அணியில் அதிகபட்சமாகும். இந்திய தரப்பில் உமேஷ் யாதவ், ஹர்திக் பாண்ட்யா தலா 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். 2 ஆண்டுக்கு பிறகு ஒரு நாள் போட்டிக்கு திரும்பிய முகமது ஷமிக்கு விக்கெட் கிடைக்கவில்லை.

அடுத்து 190 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி ஆடியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About netultim2