இந்தியாவுக்கு எதிராக வெளி நாடுகளிலிருந்து சதி – ஜிஹாதி – காலிஸ்தானி தீவிரவாதிகளின் திட்டம் முசிறியடிக்கப்படும் !!

‘சர்வதேச அளவில், இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் பிரசாரம் நடந்து வருகிறது’ என, எச்சரிக்கும் அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

விவசாய சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, பல வெளிநாட்டு பிரபலங்கள், சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.’பிரச்னை குறித்து முழுமையாக தெரியாமல், பொய்த் தகவலின் அடிப்படையில் கருத்து தெரிவிக்க வேண்டாம்’ என, மத்திய அரசு ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டாதம்பர்க், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, சமூக வலைதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தார்.

அது குறித்து தகவல்கள் அளிக்கும், ‘டூல்கிட்’ என்ற தொகுப்பையும் அவர் வெளியிட்டார். அதை தன் பதிவில் இருந்து நீக்கிய அவர், புதியடூல்கிட் வெளியிட்டார். முந்தைய டூல்கிட் காலாவதியாகிவிட்டதாக, அவர் அதற்கு விளக்கமும் அளித்திருந்தார்.இந்நிலையில், மக்களை எச்சரிக்கும் வகையில், மத்திய அரசு ஒரு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:கிரேட்டா தம்பர்க் தவறுதலாக வெளியிட்டதாகக் கூறுவதைப் பார்க்கும்போது, இந்த விவகாரத்தில், அவர்களுக்கு உண்மையான அக்கறை ஏதுமில்லை என்பது தெளிவாகிறது.தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளவும், இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்துடனுமே, வெளிநாட்டு பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர் என்பது உறுதியாகிறது. திட்டமிட்டு நடக்கும் இந்த பிரசாரம் குறித்து மக்கள் புரிந்து, தெளிவடைய வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.