இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்

ஒட்டோவா: கனடாவில் கனடாவாழ் இந்தியர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியூ.

கனடாவின் ஒட்டோவா நகரில் இந்தியர்கள் பெருமளவு வசித்துவருகின்றனர். இந்தாண்டு தீபாவளி பண்டிகையை கொண்டாட கனடா பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஒட்டோவா நகர் வந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியூ, இந்தியர்களின் உடையான ஷர்வானி அணிந்திருந்தார். பின்னர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் குத்துவிளக்கேற்றி இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். அதன் பின்னர் தபால் தலையும் வெளியிட்டார். இந்த விழாவில் கனடாவிற்கான இந்திய ஹை கமிஷனர் விகாஸ் ஸ்வரூப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழா தொடர்பான புகைப்படங்கள் கனடா பிரதமரின் டுவீட்டரில் வெளியாகியுள்ளன.