இந்தியன்-2 கைவிடப்பட்டதா? ரசிகர்கள் அதிர்ச்சி

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 20 வருடங்களுக்கு முன் வெளிவந்த படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தொடங்கவுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தின் அறிவிப்பு பிக்பாஸ் இறுதிப்போட்டியில் அறிவிக்கப்பட்டது, இதை தொடர்ந்து தற்போது இப்படம் நின்றுவிட்டதாகவும், இதில் கமலுக்கு பதில் சூர்யா நடிக்கவிருப்பதாகவும் ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் உலா வந்தது.

இதை அறிந்த இப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு கூறுகையில் ‘ஷங்கர் இயக்கத்தில் கமல் சார் இந்தியன் 2 நடிப்பது உறுதி.

ஷங்கர் அவர்கள் 2.0 இசை வெளியீட்டு விழாவில் பிஸியாகவுள்ளார், அவை முடிந்த பிறகு அடுத்து இந்தியன்-2வில் கவனம் செலுத்துவார், சமூக வலைத்தளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்’ என்று கூறியுள்ளார்.