இந்தாண்டு இந்திய ராஷ்டிரபதி பவனில் இப்தார் விருந்து ரத்து

இந்தாண்டு இந்திய ராஷ்டிரபதி மாளிகையில் ஜனாதிபதி சார்பில் நடத்தவிருந்த இப்தார் விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆண்டு தோறும் ரமலான் பண்டிகையையொட்டி, ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி சார்பில் அரசியல் பிரமுகர்கள், வி.ஐ..பி.க்களுக்கு இப்தார் விருந்து வைப்பது வழக்கமாக இருந்தது. இடையில் எவ்வித காரணமின்றி நிறுத்தப்பட்டது.

பின்னர் பிரதீபா பாட்டீல், பிரணாப் முகர்ஜி ஆகியோர் ஜனாதிபதியாக இருந்த போது மீண்டும் இப்தார் விருந்து நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில் இந்தாண்டு நடக்கவிருந்த இப்தார் விருந்து ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் 10 ஆண்டுகளுக்கு பின் முதன் முறையாக இப்தார் விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.