இதயமுள்ளவர்கள் ஒன்று கூடி நின்றதனால் இதயங்கள் பாதிக்கப்பட்டவர்களை இவ்வுலகில் தகக வைக்க முடிந்தது

கனடா தேசம் உலக நாடுகள் சிலவற்றைப் போல இதயமுள்ள நாடு. தன்னால் இயன்றளவிற்கு உலகெங்கும் இருந்து உயிராபத்திலிருந்து  தப்பும் வகையில் அகதிக் கோரிக்கையை சமர்ப்பிக்கின்றபோது, அவற்றை ஏற்றுக்கொண்டு, இலட்சக்கணக்கான உலக மக்களுக்கு வாழ்வளித்த நாடு இந்த கனடா தான்.

இவ்வாறானவர்களில் எமது தாயகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட பல இதயமுள்ளவர்கள் கடந்த வாரத்தில் “நிவாரணம்” மூலம் நன்கு அறியபபட்டவரும் மனித நேயம் எங்கே தேவைப்படுகின்றதோ, அந்த இடத்திற்கு ஓடிச்செல்லாவிட்டாலும் தனது இதயத்தை அங்கு அனுப்பிவை த்து ஆதரவு வழங்குபவருமான அன்பரும் நண்பருமான திரு செந்தில் குமரன் தலைமையிலே கனடாவில் ஒன்று கூடி நின்றதனால் இதயங்கள் பாதிக்கப்பட்டவர்களை இவ்வுலகில் தகக வைக்க முடிந்தது. கடந்த 9ம் திகதி வெள்ளிக்கிழமை இந்த உயிர்காக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டது.

ஆமாம்! கனடாவில் உள்ள தாராள சிந்தை படைத்து நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்று சேர்ந்து தாயகத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்ட தான் வாழும் நாட்களை எண்ணிக்கொண்டிருந்த சுமார் பத்து சிறுவர் சிறுமியரை காப்பாற்ற முன்வந்துள்ளார்கள்

தர்மசீலர் என்னு ம் பெயரை உலக மக்களால் சூட்டப்பட்டவர் மறைந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள். அவரது 101 வது பிறந்த நாளை கொண்டாடும் வகையிலும், அவரது நினைவைப் பகிர்ந்து கொள்ளும் நோக்கோடும் அதோடு தங்கள் நோய்களைக் குணமாக்கி இந்த உலகில் தொடர்ந்து வாழும் விருப்போடு காத்திருக்கின்ற அந்த சிறுவர்களையும் குழந்தைகளை காப்பாற்ற நிதி சேகரித்துள்ளார்கள்.

அ ன்றைய தினம் எமது கனடாவில் இதயம் தாங்கிய நூற்றுக்கணக்கானவர்களின் இணைவு, தாயகத்தில் இதய நோய்களினால் பாதிக்கப் பட்ட வர்களின் அரிய உயிர்களை தக்கவும் தப்பவும் செய்துள்ளது என்றால் அதற்கு காரணமான திரு செந்தில் குமனையும் அவரோடு சேர்ந்து உழைத்த கொடையாளிகள் மற்றும் இசைக் கலைஞர்கள் தொண்டர்கள் அனைவரையும் கனடா உதயன் இங்கு தமிழ் மக்கள் சார்பில் கரங்கூப்பி வணங்குகின்றது