இணைப்புக்கு அதிருப்தி தெரிவிக்கும் ஓ.பி.எஸ். அணி எம்எல்ஏக்கள்: மதிப்பு போய்விடும் என கருத்து

முதல்வர் பழனிசாமி அணியுடன் இணைந்தால் எங்கள் மதிப்பே போய்விடும். இரு அணிகள் சேர்ந் தால் எங்களுக்கு வளர்ச்சி இருக் காது; வீழ்ச்சிதான் இருக்கும் என ஓ.பி.எஸ். அணி எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர்.
கோவை காந்திபுரத்தில் அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) கட்சியின் சார்பில் நலத்திட்ட உதவி கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், எம்எல்ஏக் கள் ஆறுக்குட்டி (கவுண்டம்பாளை யம்), ஓ.கே.சின்னராஜ் (மேட்டுப் பாளையம்), பி.ஆர்.ஜி.அருண் குமார் (கோவை வடக்கு), கோவை முன்னாள் மேயர் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
ஆளுக்கொரு திசையில்
எம்எல்ஏ ஆறுக்குட்டி பேசும் போது, ‘‘ஓ.பன்னீர்செல்வம் தலை மையில் இருப்பதுதான் உண்மை யான அதிமுக. எதிரணியில் பணம், பதவிக்காகவே உள்ளார்கள். 10 எம்எல்ஏக்கள், 10 எம்பிக்கள் இருப்பதால் எங்கள் அணியை ஓட்டைப்படகு என்றார்கள். ஆனால் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அங்கு 122 எம்எல்ஏக்கள் இருந் தாலும் ஆளுக்கொரு திசையில் பயணிக்கிறார்கள். அவர்களுடன் இணைந்தால் எங்களுக்கான மதிப்பே போய்விடும். அதனா லேயே ஒதுங்கி இருக்கிறோம். இணைந்துவிடலாம் என நினைத் தால் நாங்களும் கடைக்கோடிக்குத் தான் போக வேண்டும். அவர்களு டன் சேர வேண்டாம் என மக்களே கூறுகிறார்கள். எங்களுக்கு மக்கள் ஆதரவு என்றும் தேவை. உள்ளாட் சித் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணி அதிக இடங்களைப் பிடிக்கும்’’ என்றார்.
வளர்ச்சி இருக்காது
இதைத் தொடர்ந்து ஓ.கே.சின்ன ராஜ் எம்எல்ஏ பேசும்போது, ‘‘யார் ஆளக்கூடாது என நினைத் தோமோ, அந்த குடும்பத்தின் கையிலேயே ஆட்சி அதிகாரம் சென்றுவிட்டது. சூழ்ச்சியாளர்கள் ஒன்றுசேர்ந்து செயல்படுகிறார்கள். இணையப்போகிறோம் என ஊடகத் தின் வாயிலாக சொல்லிக்கொள் கிறார்களே தவிர யாரும் எங்களை இதுவரை அணுகவில்லை. அவர் களுடன் சேர்ந்தால் எங்களுக்கு வளர்ச்சி இருக்காது; வீழ்ச்சிதான் இருக்கும் என மக்கள் எண்ணுவது புரிகிறது’’ என்றார்.
கோவையில் கூட்டம்?
கட்சி வளர்ச்சி, அணிகள் இணைப்பு, கூட்டணி உள்ளிட்ட ஆலோசனைகளை கோவையில் நடத்தவும், அதன் அடிப்படையில் ஜூன் 25-ம் தேதி கோவையில் பெரிய அளவில் ஒரு கூட்டத்தைக் கூட்டவும் ஓ.பி.எஸ். அணியினர் முடிவு செய்துள்ளனர். இந்நிலை யில், எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ள கருத்தால், இருஅணிகள் இணைப் புக்கான சாத்தியக்கூறுகள் குறைந் துள்ளதாகக் கருதுகின்றனர் அதிமுக தொண்டர்கள்.