இடைத்தேர்தல் கருத்துக் கணிப்பு: 14 தொகுதிகளில் திமுகவுக்கு வாய்ப்பு

22 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் தி.மு.க., 14 தொகுதிகளிலும், அதிமுக 3 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் மற்ற தொகுதிகளில் இழுபறி இருக்கும் என்றும் இந்தியா டுடே கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டசபை தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு ஏப்., 18 அன்றும், 4 தொகுதிகளுக்கு மே19 அன்றும் இடைத்தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான ஓட்டுகள் வரும் 23ம் தேதி எண்ணப்பட உள்ளன.

இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை இந்தியா டுடே வெளியிட்டுள்ளது.
அதில், திமுக 14 தொகுதிகளிலும் அதிமுக 3 தொகுதிகளிலும் வெற்றி பெறும், 5 தொகுதிகளில் இழுபறி நிலவும் எனவும் கூறப்பட்டு உள்ளது.