ஆர்.கே நகர் தேர்தல் அ.தி.மு.க,திமுக, தினகரன்,வேட்பாளர்கள் சொத்து மதிப்பு

ஆர்.கே.நகரில் போட்டியிட இன்று ஒரே நாளில் அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனன்,தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ், டி.டி.வி.தினகரன், ஆகியோர் மனுதாக்கல் செய்தனர். வேட்பு மனு தாக்கலுக்கு டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் தனிக்கொடியுடன் வந்தனர்.

அ.தி.மு.க. சார்பில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மதுசூதனன், இப்போது நான் இரட்டைக் குழல் துப்பாக்கி. அதனால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என கூறினார்.

தினகரனுக்கு ஆர்.கே.நகர் வாக்காளர்கள் மத்தியில் சென்ற இடைத்தேர்தலில் இருந்தே பெரிய ஆதரவு இருந்தது. இப்போதும் பெரும் திரளான மக்கள் அவருக்காக கூடினர். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்’ என ஒருவர் கேட்க, அவருடைய கனவுகள் நிறைவேறட்டும் என்று பதிலளித்தார். உடனேயே மதுசூதனனை இடைமறித்துப் பேச ஆரம்பித்த ஜெயக்குமார், இது ஒரு தடைசெய்யப்பட்ட பகுதி. இங்கு ஐந்து பேருக்கு மேல் வரவே கூடாது எனக் கூறினார்.

தினகரன் மொத்த சொத்து மதிப்பு – ரூ.74,17,807, அசையும் சொத்து -ரூ.16,73,799, அசையா சொத்து – ரூ.57,44,008 ஆகும்.

திமுக வேட்பாளர் மருதுகணேஷ் மொத்த சொத்து மதிப்பு – ரூ.12,57,845, அசையும் சொத்து – ரூ.2,57,845, அசையா சொத்து – ரூ.10,00,000 ஆகும்.

அதிமுக வேட்பாளர் மதுசூதனன் மொத்த சொத்து மதிப்பு – ரூ.1,49,53,941 அசையும் சொத்து – ரூ.12,53,941, அசையா சொத்து – ரூ.1,37,00,000 ஆகும்.