ஆர்.கே.நகர் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: ரஜினிகாந்த் அறிவிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கும் தனது ஆதரவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இதனை அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பாஜக சார்பாக போட்டியிடும் கங்கை அமரன், அன்று ரஜினியைச் சந்தித்ததையடுத்து கங்கை அமரனை ரஜினி ஆதரிப்பார் என்ற பரவலான எதிர்பார்ப்பு எழுந்தது.

கங்கை அமரனும் ரஜினி தனக்கு ஆதரவளிப்பார் என்பது போல் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் யாருக்கும் ஆதரவில்லை என்று ரஜினி அறிவித்துள்ளார்.