ஆர்.கே நகர் இடைத்தேர்தல் மக்கள் நலக்கூட்டணியிடம் ஆதரவு கேட்கும் ஓ.பி.எஸ் அணி இன்று மாலை சந்திப்பு

முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா காலமானதை தொடர்ந்து, அவர் போட்டியிட்டு வென்ற ஆர்.கே.நகர் தொகுதி காலியாகவே இருந்து வந்தது. இந்தநிலையில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு மற்றும் எதிர்பார்ப்புடன் பேசப்பட்டு வரும் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் போட்டியிட தயாராகி வருகின்றன. தி.மு.க, அ.தி.மு.க, ஓ.பன்னீர் செலவம் அணியினர் போட்டியிட முடிவு செய்து தங்கள் வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டுகள் தி.மு.கவை ஆதரித்தால் வரவேற்போம்’ என ஸ்டாலின் மக்கள் நலக்கூட்டணியிடம் தனது ஆதரவை கேட்டு இருந்தார். இதை தொடர்ந்து ஓ. பன்னீர் செல்வம் அணியினரும் மக்கள் நலக்கூட்டணியிடம் தங்களது ஆதரவை கோரி உள்ளனர். மேலும் இனறு மாலை மக்கள் நலகூட்டணி தலைவர்களை சந்தித்து பேச திட்டமிட்டு உள்ளனர்.