ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக அமைச்சர்

தர்மபுரியில் ஆர்.எஸ்.எஸ். ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் உயர் கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டது பலரது புருவங்களையும் உயர்த்தியுள்ளது.

மத்தியில் ஆளும் பாஜக-வின் கொள்கைத் தாயகமான ஆர்.எஸ்.எஸ். நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரிவைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் கலந்து கொள்வது இதுவே முதல் முறை.

தர்மபுரியில் பேருந்து நிலையத்தை சுத்தப்படுத்தும் பணிக்கான நிகழ்ச்சியில் தமிழக உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டது தமிழக அரசியல் நிபுணர்களின் பார்வையில் பலவித ஐயங்களை எழுப்பியுள்ளது.
ஏனெனில் அதிமுக-வின் இன்னொரு பிரிவான முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத் தலைமை பிரிவுதான் பாஜகவுக்கு நெருக்கமானது என்று கருதப்படுகிறது.
இந்நிலையில் அமைச்சர் அன்பழகன் இது குறித்து கூறும்போது, “நான் தர்மபுரியைச் சேர்ந்தவன் என்பதால் துப்புரவு பணிகளை தொடங்கி வைக்க என்னை அழைத்தனர். கடந்த 20 நாட்களாக அவர்கள் (ஆர்.எஸ்.எஸ்.) நல்ல பணியை மேற்கொண்டதால் அவர்களை ஊக்குவிப்பது அவசியமாகிறது” என்றார்.