ஆர்.எஸ்.எஸ்., தலைமையகத்தில் உரையாற்ற பிரணாப் திட்டம்

மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில், ஆர்.எஸ்.எஸ்., தலைமையகத்தில், முன்னாள் ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி, 82, உரையாற்ற உள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்., தலைமையகம் உரையாற்ற பிரணாப் திட்டம்

இது குறித்து, ஆர்.எஸ்.எஸ்., மூத்த அதிகாரி ஒருவர், நேற்று கூறியதாவது: நாக்பூரில் உள்ள, ஆர்.எஸ்.எஸ்., தலைமையகத்தில்

உரையாற்ற வரும்படி, முன்னாள் ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜிக்கு அழைப்புவிடுத்துள்ளோம். அந்த அழைப்பை, பிரணாப் ஏற்றுள்ளார். ஜூன், 7ல், ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் முன், அவர் உரையாற்றுவார். இவ்வாறு அவர் கூறினார்.

இத்தகவலை, பிரணாப் முகர்ஜி அலுவலகம், இதுவரை உறுதி செய்யவில்லை.

மூத்த, காங்., தலைவரானபிரணாப் முகர்ஜி, கடந்தாண்டு ஜூலையில், ஜனாதிபதி பதவியில் இருந்து, ஓய்வு பெற்றார்.அவர், முன்னாள் பிரதமர்கள், இந்திரா, ராஜிவ் உடன்பணியாற்றியவர்.

ஜனாதிபதியாக பதவி ஏற்கும் முன், அப்போதைய பிரதமர், மன்மோகன் சிங் தலைமையிலான, ஐ.மு., கூட்டணி அரசில், பிரணாப் முகர்ஜி, நிதியமைச்சராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.