- பிரபாகரன் குறித்தும் ஈழப் பிரச்சனை குறித்தும் தேவையில்லாமல் பேசுவதை சீமான் நிறுத்தவேண்டும் - இலங்கை தமிழ் எம்.பி
- லண்டன் பிரிட்ஜ் தாக்குதல் : உஸ்மான் கான் - பாக்., பயங்கரவாதிகளிடம் பயிற்சி பெற்றவன்
- லண்டன் பாலத்தில் கத்தியால் தாக்குதல்: துப்பாக்கிச்சூடு; மர்மநபர் கொல்லப்பட்டார்
- தமிழ் மக்களுக்கு மரியாதை, சமநிலை, சமூக நீதி அமைதிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் கோத்தபயா - மோடி
- இலங்கையின் ஹம்பந்தோடா துறைமுகம் - சீனாவின் 99 ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்த இலங்கை அதிபர்

ஆப்கானிஸ்தானில் விமானப்படை நடத்திய தாக்குதலில் அல்கொய்தா தலைவர் பலி
அமெரிக்கா-ஆப்கானிஸ்தான் விமானப்படை நடத்திய தாக்குதலில் அல்கொய்தா தலைவர் உட்பட 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மற்றும் அல்கொய்தா போன்ற அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அந்த அமைப்புகளை ஒடுக்கும் நோக்கில் ஆப்கானிஸ்தான் அரசு படைகளுடன் இணைந்து அமெரிக்க படைகளும் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தெற்கு ஹெல்மாண்ட் மாகாணத்தில் உள்ள மூசா ஹலா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அமெரிக்கா-ஆப்கானிஸ்தான் விமானப்படைகள் இணைந்து நடத்திய அதிரடி தாக்குதலில் அல்கொய்தா அமைப்பின் இந்திய துணைக்கண்டத்தின் தலைவர் அசிம் உமர் உள்பட 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.