ஆப்கன் மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் நான்கு பேர் பலி

ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் நான்கு பேர் பலியானார்கள். காபூல் நகரில் உள்ள மசூதி ஒன்றில் ஜூன் 11ம் தேதி வெள்ளிக்கிழமையன்று தொழுகை நடந்த போது பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் மசூதியின் இமாம் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் காபூலில் உள்ள மற்றொரு புகழ்பெற்ற மசூதியில் பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் அந்த மசூதியின் இமாம் கொல்லப்பட்டார்.

ஆப்கன் அரசுக்கும், தாலிபன் பயங்கரவாதிகளுக்கும் இடையே அமைதி உடன்படிக்கை மேற்கொள்வதில் முக்கிய பங்காற்றிய இமாம்கள் மீது ஐ.எஸ்., பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக அந்நாட்டு உள்த்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.