ஆந்திராவுக்கு சிறப்பு நிதி மட்டும் தான்: ஜெட்லி

புதுடில்லி; ஆந்திர மாநிலத்திற்கு அவர்கள் கேட்ட சிறப்பு அந்தஸ்தை தர முடியாது. ஆனால் அம்மாநில வளர்ச்சி பணிகளுக்காக சிறப்பு நிதி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆந்திராவின் பொல்லாவரம் நீர்பாசன திட்டத்திற்கு சிறப்பு நிதி வழங்குவதுடன், வரிச்சலுகையும் அளிக்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், ஆந்திர மறுசீரமைப்பு சட்டத்தை கருத்தில் கொண்டு, அந்த சட்டத்தின்படி ஒவ்வொரு தேவையையும் நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆந்திராவில் பல்வேறு மக்கள் நல திட்டங்களுக்காக சிறப்பு நிதி ஒதுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் ஆந்திராவிற்காக ரூ.1976 கோடியை மத்திய அரசு ஒதுக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இவற்றில் ரூ.450 கோடி அமராவதி திட்டத்திற்காகவும், ரூ.350 கோடி 7 பின்தங்கிய மாவட்டங்களின் வளர்ச்சிக்காகவும் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.