ஆதிபராசக்தி குருமன்றத்தின் ஆடிப்பூர பெருவிழா

கனடா ஸ்காபுறோ நகரில்80 (E) நாஸ்டின் வீதியில் யுனிட் 99 ல் அமைந்துள்ள “மேல்மருவததூர் ஆதிபராசக்தி குருமன்றத்தின் ஆடிப்பூர பெருவிழா ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் 1.00 வரை பக்தி பூர்வமாக நடைபெற்றது.
செவ்வாடை அணிந்த சக்திகள் ஆண்களும் பெண்களுமாக ஆலயத்தை வந்தடைந்து, அமைதியாகவும் மருவத்தூர் அம்மா வழிபட்ட வணணமும்அமைதியாக அமர்ந்திருந்து ஒவ்வொரு பூசை மற்றும் வழிபாடுகள் அனைத்தையும் பேணி பின்னர் கஞ்சிக் கலசம் தாங்கி வீதி வலம் வந்தனர்

மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் இடம்பெற்ற கஞ்சிக் கலசம் தாங்கும் பவனி பார்ப்பதற்கு பக்தி பூர்வமாக காணப்பட்டது. ஓம் சக்தி! பராசக்தி! ஒம் சக்தி! பராசக்தி! என்ற மனது உருகும் அம்மையின் வரிகள் அனைவருக்கும் உற்சாகத்தையும் வாழ்க்கையிலும் இறைவன் மீதும் நம்பிக்கையைக் கொண்டு வந்தன.

நூற்றுக்கணக்கான செவ்வாடைச் சக்திகள் காணப்படட அந்த குருமன்ற அமைந்திருந்த வர்த்தக வளாகம் எங்கும் “ஓம் சக்தி! பராசக்தி! ஒம் சக்தி! பராசக்தி! என்ற மனது உருகும் அம்மையின் வரிகள் இன்னமும் ஓங்காரமாய் ஒலிப்பதாகவே எமது மனது சொல்லிக்கொண்டே உள்ளது.