- பிரிட்டன் பொதுத் தேர்தல் 2019: இங்கிலாந்து ராணியிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார் போரிஸ் ஜான்சன்
- எனக்கு எய்ட்ஸ் உங்கள் மகளுக்கு வேண்டுமா? கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் கிரண் குமார்
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு - அருணாசலேஸ்வரர் கிரிவலம்
- குடியுரிமை சட்டத் திருத்த மசோதா : "இந்திய முஸ்லிம்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை" - அமித் ஷா
- 16வது சிறுமி கிரேட்டா துன்பர்க்கின் படத்தை அட்டையில் வெளியிட்டு டைம் இதழ்

ஆட்டோ டிரைவருக்கு ரூ.47,500 அபராதம்
ஒடிசாவில் குடித்து விட்டு ஆட்டோ ஓட்டியது உள்ளிட்ட குற்றங்களுக்காக ஆட்டோ டிரைவருக்கு ரூ.47,500 அபராதம் விதிக்கப்பட்டது.
போக்குவரத்து விதிமீறல்களுக்கு கடும் அபராதம் விதிக்கும் வகையில், மோட்டார் வாகனச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது. இந்த புதிய உயர்த்தப்பட்ட அபராதங்கள், நாடு முழுவதும், 1ம் தேதி(செப்.,1) அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிலையில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் குடித்துவிட்டு ஆட்டோ ஓட்டியது, ஆட்டோவில் தேவையான ஆவணங்களை கொண்டு செல்லாததற்காக, ஆட்டோ டிரைவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
குடிபோதையில் ஆட்டோ ஓட்டியதற்காக ரூ.10 ஆயிரம், காற்று மாசு ஏற்படுத்தியதற்காக ரூ.10 ஆயிரம், வண்டிக்கு பர்மிட் இல்லாததற்காக ரூ.10 ஆயிரம், பதிவெண் இல்லாமல் ஓட்டியதற்காக ரூ.10 ஆயிரம், இன்சுரன்ஸ் புதுப்பிக்காததற்காக ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ.47,500 அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து புவனேஸ்வர் நகரின் ஆர்.டி.ஓ., தெரிவிக்கையில், ஆட்டோவின் மதிப்பு ரூ.2 ஆயிரமோ அல்லது ரூ.62 ஆயிரமோ என்பது முக்கியமல்ல. விதிகளை பின்பற்ற வேண்டும் என்றார்.