ஆட்சியை கவிழ்க்கும் நோக்கம் இல்லை: சட்டப்பேரவை கூடும்போது பல அதிசயங்கள் நடக்கும் – மாஃபா பாண்டியராஜன் சூசகம்

‘ஆட்சியை கவிழ்க்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை. விரைவில் சட்டப்பேரவை கூடும்போது பல அதிசயங்கள் நடக்கும்’ என்று முன்னாள் அமைச்சரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான மாஃபா க.பாண்டியராஜன் தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ‘அம்மா கல்வியகம்’ என்ற இணையதளத்தை தனது வீட்டில் நேற்று தொடங்கி வைத் தார். அதன்பின் நிருபர்களிடம் பாண்டியராஜன் கூறியதாவது:

நாட்டிலேயே முதல்முறை யாக, இலவசக் கல்வி இணைய தளத்தை ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்துள்ளார். மற்ற இணையதள சேவை நிறுவனங் கள் பயிற்சி அளிப்பதற்கு பதிவு செய்யவே ரூ.1,000 வரை பெறு கின்றன. ஆனால், இந்தக் கட்டணம்கூட ‘அம்மா கல்வியகம்’ இணையதளத்தில் இல்லை.

அதிமுக பொதுச்செயலாள ராக சசிகலா தேர்வு செய்யப்பட் டதை எதிர்த்து, தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டது. அவர்கள் சசிகலா தரப்பில் இருந்து பதிலளிக்க கோரினர். சசிகலா தரப்பினரும் பதில் அளித்துள்ளனர். இனி தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்க வேண்டும். நல்ல முடிவை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என நம்புகிறோம். அதன்பின் மக்கள் நீதிமன்றத்துக்கு செல்வோம்.

சேலத்தில் முதல் பொதுக்கூட் டத்தை நடத்த முடிவு செய்துள் ளோம். தொடர்ந்து மண்டல வாரி யாக பொதுக்கூட்டங்கள் நடத்தப் படும். விரைவில் பொதுமக்களை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

தமிழக சட்டப்பேரவை விரைவில் கூட உள்ளது. அப்போது பல அதிசயங்கள் நடக்கும். ஓட் டெடுப்பு என்பது முடியவில்லை. பேரவைத் தலைவர் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு  நடக்கும். பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெற வாக்கெடுப்பு நடக்கும். அப்போதெல்லாம் ரகசிய வாக்கெடுப்பு கோருவோம்.

நம்பிக்கை வாக்கெடுப்பின் போது 6 பேர் மனம் மாறியிருந்தால் தற்போதைய நிலைமையே வேறு. தற்போதுள்ள அரசைக் கவிழ்க் கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. அதிமுக குடும்ப ஆதிக்கத்தில் இருந்து விடுபட வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். இதற்கான தர்மயுத்தம் தொடங்கியுள்ளோம். எங்களுக்கு கட்சியின் பெரும்பாலான பொதுக் குழு உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது. கட்சி பிளவுபடக்கூடாது. அதிமுக ஒரே இயக்கம். அதே நேரம் குடும்ப ஆதிக்கம் ஒழிந்து விரைவில் கட்சியும் ஆட்சியும் எங்கள் கைக்கு வரும். ஓ.பன்னீர் செல்வம் முதல்வராவார் என்றார்.