ஆக்சிஜன் வினியோகத்தில் புதுமையான முறைகளை கடைபிடிக்க வேண்டும்: பிரதமர் மோடி

நாடு முழுவதும் ஆக்சிஜன் வினியோகம் மற்றும் கையிருப்பை அதிகரிப்பது குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: ஆக்சிஜன் கையிருப்பை அதிகரிப்பது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமரிடம் அதிகாரிகள் விளக்கினர். அப்போது, மாநிலங்களுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் அளவு மற்றும் ஆக்சிஜன் சப்ளை குறித்து மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து அதிகாரிகள் விளக்கினர். தற்போது, 20 மாநிலங்களுக்கு தினமும், 6,785 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் தேவைப்படுகிறது. அந்த மாநிலங்களுக்கு தினமும் 6,822 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.