அ.தி.மு.க. அணிகள் இணைய ஜெயலலிதா நினைவிடத்தில் விஷம் குடித்த தொண்டர் பலி

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையைச் சேர்ந்தவர் சொர்ணம் (வயது 65). அ.தி.மு.க. தொண்டர். அ.தி.மு.க. இரு அணிகளாக பிரிந்து செயல்படுவதால் மிகவும் மன வருத்தத்தில் இருந்தார்.

கடந்த 15-ந்தேதி அவர் சென்னை வந்தார். மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியை சுற்றி வந்த அவர் அ.தி.மு.க. இரு அணிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறி திடீரென விஷம் குடித்தார்.

உடனடியாக அவரை மீட்டு ராயப்பேட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு சொர்ணம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.