- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

அவுஸ்த்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட ஒன்பது இலங்கையர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதானார்கள்
அவுஸ்ரேலியாவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் நாடுகடத்தப்பட்ட ஒன்பது இலங்கையர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த செவ்வாய்கிழமையன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவுஸ்ரேலியாவில் பல்வேறு காலகட்டங்களில் புகலிடம் கோரிய, 9 இலங்கையர்கள் நேற்று முன்தினம் புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் பேர்த் விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் ஒன்றின் மூலம் பலவந்தமாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.
அன்றைய தினம இந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்ததை அடுத்து, அவுஸ்ரேலிய அதிகாரிகளால் இந்த 9 பேரும் இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதையடுத்து இந்த 9 பேரையும் கைது செய்துள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவர்களைத் தடுத்து வைத்து விசாரணை செய்து வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் 27, 29, 36, 48 வயதுகளை உடையவர்கள் என்றும், முந்தல், கொச்சிக்கடை, உடப்பு, சிலாபம், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.