
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 15 பேர் காயம்
January 16, 2018
மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 15 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காலை 8 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது. இதில் பங்கேற்க 1000 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.1241 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. டாக்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 15 பேர் காயமடைந்தனர். காளை உரிமையாளர் ஒருவரையும் காளை முட்டியது. அவர்களுக்கு டாக்டர் சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது