அரசு வீட்டை காலி செய்ய வேண்டி உள்ளதால் சென்னையில் புது வீடு தேடும் ஓ.பன்னீர்செல்வம்

புதிய முதல்–அமைச்சராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதையடுத்து முதல்–அமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் இழந்தார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தான் குடியிருந்து வரும் அரசு பங்களா வீட்டை காலி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதன்படி ஓ.பன்னீர்செல்வம் வீட்டின் நுழைவுவாயில் முன்பு இருந்த அறிவிப்பு பலகை கடந்த 2 நாட்களுக்கு முன்பு அகற்றப்பட்டுவிட்டது. இதன் மூலம் உடனடியாக அரசின் பங்களா வீட்டை காலி செய்துவிட்டு விரைவில் புதிய வீட்டில் குடியேற பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளனர். தனக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக தினமும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்து செல்வதால் அதற்கு ஏற்றார் போல சென்னையிலேயே வாடகை வீட்டை அவர் தேடி வருகிறார்.

ஓ.பன்னீர்செல்வம் முதல்–அமைச்சராக பதவி வகித்த நேரத்திலும், அவருடைய இல்லத்தின் நுழைவுவாயிலில் இருந்த அறிவிப்பு பலகையில் ‘முதல்–அமைச்சர்’ என்று எழுதப்பட்டது இல்லை. மாறாக அவர் வகித்த நிதி அமைச்சர் பொறுப்பு மட்டுமே எழுதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.