அரசியல் அதிகாரத்தை அளவிட்டுக் காட்டிய உள்ராட்சி மன்றத் தேர்தல்கள்

கடந்த 10ம் திகதி இலங்கையெங்கும் உள்ள உள்;ராட்சி மன்றங்களுக்கான அங்கத்தவர்களையும் தலைவர்களையும் தேர்ந்தெடுக்க நடைபெற்ற தேர்தல் வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் பல மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளன. பாராளுமன்றத்திற்கு செல்லும் ஆசையோடு அந்த நாட்களில் சென்றவர்கள் எல்லோரும் இப்போது அதிகார பலத்திற்காகவும் பணம் சம்பாதிப்பதற்காகவும் அங்கு செல்வதற்கு முனைகின்றார்கள்.

பாராளுமன்றத்திற்கு தெரவாகியுள்ள தமிழ் சிங்கள முஸ்லிம் உறுப்பினர்களுக்கு கிட்டும் வாய்ப்புக்களும் வசதிகளும் வேறு எவருக்கும் கிடைக்காது என்ற காட்சிகளின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் இப்போது அதிக மதிப்புள்ளவையாக மாறிவிட்டன. சாதாரணமாக ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தனது உயிருக்கு ஆபத்து நெருங்குகின்றது என்று தெரிவித்து விட்டால் அவர் எந்தக் கட்சியாக இருந்தாலும் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. நாட்டு மக்களின் வரிப்பணம் சேகரிக்கப்படும் “திறைசேரியில்” இருந்து பெருந்தொகைப்பணம் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக செலவு செய்யப்படுகின்றது. இதுதான் இலங்கையில் உள்ள பாராளுமன்ற அரசியலில் காணப்படும் வெளிச்சமான விடயமாகும்.

அண்மையில் நடந்து முடிந்த உள்;ராட்சி மன்றத் தேர்தல்கள் அங்கு அரசியல் அதிகாரத்தை அளவிட்டுக் காட்டும் அளவிற்கு முடிவுகளை அனைவருக்கும் தந்துவிட்டுப் போயுள்ளது. அபிவிருத்திக்கான தேர்தலாக இல்லாமல் அரசியலுக்கான தேர்தலாக மாறியுள்ளது. பலர் தலை குனிந்து விட்டார்கள். சிலர் தங்கள் தலைகளை நிமிர்த்தத் தொடங்கியுள்ளார்கள். எத்தனை நாட்களுக்கு இந்த நிமிர்வு தொடரும் என்று காத்திருந்து பார்ப்போம்.