அரசியல்வாதிகளின் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த டி.என்.சேஷன் உயிரிழந்தார்

இந்திய முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் ஞாயிறன்று இரவு 9.30 மணியளவில் சென்னையில் தன்னுடைய வீட்டில் உயிரிழந்தார். அவருக்கு வயது 86.

1955ஆம் ஆண்டு பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியான டி. என். சேஷன், 1990ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி, இந்தியாவின் தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். நாடு முழுவதும் பல தேர்தல் திருத்தங்களைக் கொண்டுவந்தவர் சேஷன்..

கடந்த தசாப்தத்தில் டி.என். சேஷனை விட வேறு எந்த அதிகாரியும் இவ்வளவு பெயரைப் பெற்றதில்லை. இந்திய அரசியல்வாதிகள் கடவுளுக்கும் டி.என்.சேஷனுக்கும் மட்டுமே பயப்படுவார்கள் என 90களில் வேடிக்கையாகப் பேசப்பட்டது.

சேஷனுக்கு முந்தைய தேர்தல் ஆணையர்கள் அனைவரும் அரசின் விருப்பப்படியே செயல்பட்டு வந்தனர்.

சேஷன் ஒரு நல்ல அதிகாரியாக அதிகாரத்தின் தலைமை இடத்திற்கு வந்தார்.

சேஷன் எந்த துறையில் பணிபுரிந்தாலும் அந்த துறையில் திருத்தங்கள் ஏற்பட்டது அவருடைய புகழின் மற்றுமொரு காரணம். ஆனால் 1990களில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலால் சேஷன் மந்திரிகளின் பகையைச் சம்பாதித்தார்.

புகைப்பட காப்புரிமை @DrSYQuraishi@DRSYQURAISHI
அவர், ”நான் காலை உணவாக அரசியல்வாதிகளை சாப்பிடுவேன்” என கூறினார். அவ்வாறு கூறியது மட்டுமில்லாமல் செய்தும் காட்டினார். இதனால் அவர் `அல்சேஷன்` என்றும் அழைக்கப்பட்டார்.

1992 உத்திர பிரதேச சட்டமன்ற தேர்தலின்போது, மாவட்ட மாஜிஸ்ட்ரேட், காவல்துறை அதிகாரிகள் மற்றும் சுமார் 280 தேர்தல் அலுவலர்கள் அனைவரும் தேர்தல் முடியும்வரை தனக்கு கீழ் செயல்பட வேண்டும் என விளக்கினார்.

இது குறித்து ஒரு தேர்தல் நடத்தும் அதிகாரி, நாங்கள் கருணையில்லா மனிதரின் கருணையின் அடிப்படையில் இருக்கிறோம் என வேடிக்கையாகக் கூறினார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் மட்டும் சுமார் 50 ஆயிரம் குற்றவாளிகள் முன் ஜாமீன் எடுப்பது அல்லது போலீஸில் சரணடைவது என இரண்டு வாய்ப்புகள் அளித்தார்.

ஹிமாச்சல பிரதேசத்தில் தேர்தல் நாளன்று, பஞ்சாப் மாநிலத்தின் அமைச்சர்களின் துப்பாக்கி ஏந்திய ஆட்கள் 18 பேரை மாநிலத்தின் எல்லையைத் தாண்டாமல் தடுத்து நிறுத்தினார். உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரின் எல்லையில் நிறுத்தப்பட்ட நாகாலாந்து போலீஸார் பீகார் சட்ட மன்ற உறுப்பினர் பப்பு யாதவை எல்லையைக் கடக்க விடவில்லை.

ஹிமாச்சல பிரதேசத்தின் ஆளுநராக இருந்த குல்ஷேர் அஹமது சேஷனிடம் மாட்டிய அரசியல்வாதிகளில் மிக முக்கியமானவர்.