அமைந்திருக்கும் “துர்க்கேஸ்வரம்” ஶ்ரீ துர்க்கையம்மன் ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவம்

கனடா – ஸ்காபுறொ நகரில் அமைந்திருக்கும் “துர்க்கேஸ்வரம்” ஶ்ரீ துர்க்கையம்மன் ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆலயத்தின் பிரதம குரு சிவஶ்ரீ கணேச சுவாமிகள் தியாகராஜக் குருக்கள் மற்றும் அலுவலக உதவியாளர் திரு கிருஸ்ணா சிவப்பிரகாசம் மற்றும் உதவிக்குருமார்கள் மற்றும் தொண்டர்கள் ஆகியோர் அனைவரும் ஒன்று சேர்ந்து இவ்வருட இரதோற்சவத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்கள்.
இன்றை தேத்திருவிழாவின் உபயகாரரான கனடாவில் ஒன்றுக்கு மேற்பட்ட வர்த்தக நிறுவனங்களை நடத்திவரும் திரு கணேசன் சுகுமார் அவர்கள் தனது குடும்பததினருடன் வந்து இரதோற்சவத்திலும் ஏனைய பூசை அபிசேகங்கள் ஆகியவற்றில் கலந்து கொண்டார்.
இன்றைய இரதோற்சவத்திற்கு, பிரான்ஸ் நாட்டிலிருந்து கனடாவிற்கு வருகை தந்துள்ள பிரபல தாயகப் பாடல்கள் புகழ் மயிலையூர் இந்திரன் அவர்களும் உதயன்பிரதம ஆசிரியர் அவர்களுடன் சென்றிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.