அமைச்சரவை தீர்மானங்களை எந்த அமைச்சரும் வெளியில் விமர்சிக்கக் கூடாது என ஜனாதிபதி மைத்திரி எச்சரிக்கை

அமைச்சரவை கூட்டத்தில் எடு க்கும் தீர்மானங்களை வெளியில் உள்ள ஊடகவியலாளர்களிடம் விமர்சிக்கும் வகையில் அமைச்சர் கள் கருத்து வெளியிடுவதாக ஜனா திபதி குற்றம் சுமத்தியுள்ளார். இவ்வாறான தீர்மானங்கள் வெளியில் விமர்சிக்கப்படுவதால், அரசாங்கத்தின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு கடும் அழுத்தம் ஏற்படுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதன் ஊடாக அரசாங்கத்தின் நடவடிக் கைகள் குறித்து தவறான புரிந்துணர்வு மக் கள் மத்தியில் சென்றடைவதாக ஜனாதிபதி கூறியுள்ளார். அமைச்சரவை கூட்டத்தின் போது அமைதியாக இருந்து விட்டு, வாகனத்தில் ஏறி பின்னர் அமைச்சர்கள் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகின்றனர். இது தொடர் பான தகவல் கிடைத்ததை அடுத்து ஜனாதி பதி இந்த உத்தரவை வெளியிட்டுள்ளார்.அரசாங்க செயற்பாடு குறித்து ஏதாவது மாற்று கருத்து இருப்பின் அமைச்சரவை கூட்டத்திலேயே அதனை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என கடுமையாக எச்ச ரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.