- எழுத்தாளர் சல்மான் ருஷ்டி உடல்நிலை முன்னேற்றம்
- டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி...!
- தமிழகத்துக்கு நன்றி தெரிவித்து செஸ் வீரர்கள் நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை
- மாஜி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்களாவில் புலனாய்வு அதிகாரிகள் ரெய்டு ஏன் ?
- 5வது நாளாக தொடரும் போர் பயிற்சி : தைவான் ஜலசந்தியில் சீனா அடாவடி

அமேரிக்காவில் காரோண : அதிபர் ட்ரம்ப் மீது முன்னாள் அமெரிக்கா அதிபர் ஒபாமா தாக்கு
அதிபர் டிரம்ப்பின் நிர்வாக குளறுபடியால், அமெரிக்க கொரானாவினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு முன்னாள் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு தற்போது வரை 13 லட்சத்து 47 ஆயிரத்து 318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 80 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், தான் அதிபராக இருந்த போது நிர்வாகத்தில் இருந்த 3 ஆயிரம் பேருடன் வீடியோ கான்பரன்ஸ் முறையில் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கலந்துரையாடினார். சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்த ஆலோசனை இணையதளங்களில் வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில், இந்த அதிபர் தேர்தல் மிகவும் முக்கியமானது. நான் என்னுடைய முழு ஆதரவை ஜோ பிடனுக்கு அளிக்கிறேன். நாம் ஒரு நபரை எதிர்க்கவில்லை, ஒரு கட்சியை எதிர்க்கவில்லை, நாம் இப்போது தேர்தலில் எதிர்கொள்ளும் விஷயம் மிக பெரியது. மிக வலிமையான விஷயத்தை நாம் எதிர்கொள்கிறோம். டிரம்ப்பின் நிர்வாக திறனில் உள்ள குளறுபடியால் அமெரிக்கா இந்த பேரழிவை சந்தித்துள்ளது. இழப்பு குறித்து சிறிதும் கவலைப்படாத அரசால் அமெரிக்கா இன்று பேரிழப்பை சந்தித்துள்ளது. சுயநலமாகவும், பழமைவாதியாகவும், நாட்டை பிளவுபடுத்தும் நோக்கிலும் இருக்கும் அரசால், தற்போது அமெரிக்கா பாதிப்படைந்துள்ளது.
உலக நாடுகள் அமெரிக்காவை உன்னிப்பாக கவனிக்கின்றன என்பதை மறந்து ஒரு அரசு செயல்படுகிறது. இந்த நிர்வாகம் அமெரிக்காவிற்கு பயனற்றது என நினைக்கிறேன். சிறந்த அரசாங்கங்களுக்கு கூட தற்போது மோசமாக உள்ளது. இந்த விவகாரத்தில் எனக்கு என்ன இருக்கிறது. அனைவருடன் கைகுழுக்கும் மனநிலையில், நமது அரசு இருப்பது முழுமையான பேரழிவாக இருக்கும். இதனால் தான். ஜோ பிடனுக்கு அதிக நேரம் செலவழித்து பிரசாரம் செய்ய உள்ளேன். இவ்வாறு ஒபாமா கூறியுள்ளார்.