அமெரிக்க ராணுவ நாய்க்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் புகழாரம்

சிரியாவில் நடந்த தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி மரணமடைந்ததாக அமெரிக்கா அண்மையில் தெரிவித்தது. சுரங்கத்தில் பதுங்கியிருந்த பாக்தாதி மீது தாக்குதல் நடத்த அமெரிக்க ராணுவம் சென்றபோது அவர்களுடன் ராணுவ நாயும் சென்றது. நாய்களால் துரத்தப்பட்ட அல் பாக்தாதி, ஒரு சுரங்கத்துக்குள் புகுந்தார். அங்கிருந்து வெளியேற வழி இல்லாத நிலையில், தன் உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார். இதில் அவர் உடல் சிதறி பலியானார். இதில் ஒரு நாய்க்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த நாயின் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பாக்தாதி மீதான தாக்குதலில் இந்த நாய் முக்கிய பங்குவகித்ததாக கூறி, புகழாரம் சூட்டியுள்ளார்.