அமெரிக்க படைகள், பாகிஸ்தானுக்குள் புகுந்து ஒசாமா பின் லேடனை கொன்றது போல் தற்போதைய சூழலில்

அமெரிக்க படைகள், பாகிஸ்தானுக்குள் புகுந்து ஒசாமா பின் லேடனை கொன்றது போல் தற்போதைய சூழலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். இந்தியா – பாக்., இடையே எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தற்போது நிலவும் பதற்றமான சூழல் குறித்து பேட்டி அளித்துள்ள அருண் ஜெட்லி, இன்றைய சூழலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அமெரிக்க படைகள் பாக்.,கிற்குள் புகுந்து ஒசாமா பின் லேடனை அழித்தது போன்று எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஒட்டுமொத்த நாடும் எங்களுக்கு ஆதரவாக உள்ளது. உரிய நேரத்தில் எதுவும் நடக்க வாய்ப்புள்ளது என்றார்.

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்த முயன்ற பாக்., விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை அடுத்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உள்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், வெளியுறவு செயலாளர், பாதுகாப்பு செயலாளர், உளவுத்துறை அதிகாரிகள், முப்படை தளபதிகள் ஆகியோருடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார்.
போர் விமானங்களை எந்த நேரத்திலும் இயக்க தயாராக இருக்கும்படி விமானப்படைக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் ஜெட்லியின் இந்த கருத்து போர் சூழலை உறுதி செய்யும் விதமாக உள்ளது.