- நடிகர் மிதுன் சக்ரவர்த்தி கோல்கட்டாவில் மாநில தலைவர் திலீப் கோஷ் தலைமையில் பா.ஜ.,வில் இணைந்தார்
- நாங்க ஆட்சிக்கு வந்தால் ரௌடியிசமே இருக்கது : தி மு க ஸ்டாலின் தமாஷ் !!
- 142 நாடுகளுக்கு இந்தியாவின் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகள் விநியோகம்
- இலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள் !!
- கிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா?

அமெரிக்க தேர்தலில் ரஸ்ய தலையீடு விவகாரம் தொடர்பாக பிரபல மாடல் அழகி நாஸ்டியா ரிப்கா கைது செய்யப்பட்டார்
அமெரிக்காவில் 2016ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசுகட்சி வேட்பாளராக போட்டியிட்ட ட்ரம்பின் வெற்றிக்காகவும், ஜனநாயக கட்சி வேட்பாளராக நின்ற ஹிலாரி கிளிண்டன் தோல்விக்காகவும் ரஸ்யா நேரடியாக தலையிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. இந்த குற்றச்சாட்டை ரஸ்யாவும், ட்ரம்பும் பல முறை மறுத்துள்ளனர்.
ஆனால், டரம்பின் தேர்தல் பிரசாரத்தில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது என்று பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி நாஸ்டியா ரிப்கா கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் அவர் மொஸ்கோ விமான நிலையத்தில் ரஸ்ய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக அவர் தாய்லாந்து நாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்டார்.அவர் கைது செய்யப்பட்டது தொடர்பான படத்தை அவரது சட்டத்தரணி டிமிட்ரி ஜாட் சரின்ஸ்கி சமூக வலைத்தளம் ஒன்றில் வெளியிட்டுள்ளார். அவர் இந்த கைது நடவடிக்கையை சர்வதேச ஊழல் என்று விமர்சித்து உள்ளார்.