- தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி
- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்

அமெரிக்க தேர்தலில் டிரம்புக்கு மோடி பிரசாரமா?
சமீபத்தில், ஹூஸ்டன் நகரில் நடந்த, அமெரிக்க வாழ் இந்தியர்கள் கூட்டத்தில், பிரதமர் மோடியுடன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் பங்கேற்றார். ‘இனி டிரம்ப் அரசு’ என, மோடி பேசினார். அமெரிக்க விவகாரத்தில் தலையிடும் வகையில், மோடியின் பேச்சு இருந்ததாக, காங்., உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இது குறித்து, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:டொனால்டு டிரம்புக்கு ஆதரவாக, பிரதமர் மோடி பேசவில்லை. அவருடைய பேச்சு தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஒருவருடைய பேச்சை திரித்துக் கூறுவது சரியல்ல.
‘கடந்த அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, ‘இனி டிரம்ப் அரசு’ என, அமெரிக்க வாழ் இந்தியர்கள் இடையே, டிரம்ப் பிரசாரம் செய்தார்’ என்று தான், மோடி கூறினார். அமெரிக்காவின் உள்நாட்டு அரசியலில் தலையிடுவதில்லை என்ற நமது கொள்கையை, மோடி மீறவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.