அமெரிக்க அதிபர் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் மோசடி?

அமெரிக்க அதிபர் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் மோசடி நடந்துள்ளதாகவும், இதனால் ஓட்டு எண்ணிக்கையை தடுத்து நிறுத்த உச்சநீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய டிரம்ப் கூறியதாவது: புளோரிடா, டெக்சாஸ் மாகாணங்களில் வெற்றி பெற்றுள்ளோம். நாம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளோம். எதிர்பார்க்காத மாகாணங்களில் நமக்கு வெற்றி கிடைத்துள்ளது. டெக்சாஸ், ஜார்ஜியாவில் வெற்றி கிடைத்துள்ளது. பென்சில்வேனியா, மிக்சிகன், விஸ்கான்சினில் வெற்றி கிட்டும். சிறப்பான ஆதரவை அளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

என்னை பொறுத்தவரை நான் வென்றுவிட்டேன். இந்த தேர்தலில், சாதனை அளவாக ஏராளமானோர் ஓட்டு போட்டனர். ஆனால், ஓட்டு எண்ணிக்கையில் மோசடி நடந்துள்ளது. இதனால், ஓட்டு எண்ணிக்கையை தடுத்து நிறுத்த உச்சநீதிமன்றம் செல்வேன். இவ்வாறு அவர் கூறினார்.