அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி இந்தியா வருவது மகிழ்ச்சி: பிரதமர் மோடி

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி இந்தியா வருவது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இம்மாதம் 24 மற்றும் 25 தேதிகளில் இந்தியா வர உள்ளார். இது தொடர்பாக அவர் இன்று கூறுகையில், பிரதமர் மோடி எனக்கு நல்ல நண்பர். அவர் மிகச்சிறந்த மனிதர். நான் இந்தியா செல்ல ஆவலுடன் காத்திருக்கிறேன். இம்மாத இறுதியில் இந்தியா செல்ல உள்ளேன் எனக்கூறினார்.

இந்நிலையில், டிரம்ப் வருகைக்கு மகிழ்ச்சி தெரிவித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவு:

அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், அவரது மனைவி மெலினாவும் வரும் 24 மற்றும் 25 ல் இந்தியா வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நமது மதிப்பிற்குரிய விருந்தினருக்கு, இந்தியா மறக்க முடியாத வரவேற்பு அளிக்கும். இந்த பயணம் சிறப்பான ஒன்று. இந்தியா – அமெரிக்கா இடையிலான நட்பை நீண்ட காலத்திற்கு வலுப்படுத்த உதவும்

Narendra Modi

@narendramodi

Extremely delighted that @POTUS @realDonaldTrump and @FLOTUS will visit India on 24th and 25th February. India will accord a memorable welcome to our esteemed guests.

This visit is a very special one and it will go a long way in further cementing India-USA friendship.

Narendra Modi

@narendramodi

India and USA share a common commitment to democracy and pluralism. Our nations are cooperating extensively on a wide range of issues. Robust friendship between our nations augurs well not only for our citizens but also for the entire world.