அமெரிக்காவை பொய்யான வோட்டுக்களால் சீரழிக்க விடமாட்டோம்: டிரம்ப் ஆவேசம்

அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் ஜோ பைடன் 306 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் வரும் ஜனவரி 20 ஆம் தேதி அதிபர் பதவி ஏற்க உள்ளார்.

இந்நிலையில் ஆட்சி மாற்ற குழு டொனால்ட் டிரம்ப் அதிபர் மாளிகையை விட்டு வெளியேற வலியுறுத்தி வரும் போதும் இதனால் டிரம்ப் இன்னமும் குடியரசு கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என நம்பிக் கொண்டிருக்கிறார் இது முன்னதாக சமூகவலைதளங்களில் வேடிக்கைக் உள்ளானது குறிப்பிடத்தக்கது

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் ஜனநாயகக் கட்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து வரும் ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக ஜோ பைடனும் துணை அதிபராக கமலா ஹாரிஸும் வெற்றி பெற்றுள்ளனர். தாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கத்தை எவ்வாறு குறைப்பது என அவர்கள் திட்டமிடத் துவங்கி விட்டனர்.

நிலைமை இவ்வாறிருக்க அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் இன்னும் தனது தோல்வியை ஏற்க மறுத்து தேர்தல் முறைகேடு குறித்து வழக்கு தொடுத்து வருகிறார்.

முன்னதாக அமெரிக்க அதிபர் டிரம்ப், பாக்ஸ் நியூஸ் உள்ளிட்ட தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களை கடுமையாக விமர்சித்து வந்தார். தனது பக்க நியாயம் மற்றும் வெற்றியை ஒளிபரப்பு செய்யாமல் ஒருதலைபட்சமாக ஜனநாயக கட்சிக்கு அமெரிக்க ஊடகங்கள் ஆதரவு தெரிவித்ததாக குற்றம்சாட்டியிருந்தார்.

இதனை அடுத்து தான் தனியாக ஓர் ஓடிடி ஊடகத்தை ஓடவிடுவதாக அவர் தெரிவித்தார். தேர்தல் முறைகேடு நடந்துள்ளது என குற்றஞ்சாட்டிய டிரம்ப் அதிக அளவில் வழக்குகளைத் தொடர்ந்துள்ளார். ஆனால் டிரம்ப் குற்றஞ்சாட்டுவதுபோல மிகப்பெரிய அளவில் வாக்குப்பதிவு முறைகேடு நடந்திருக்க வாய்ப்பில்லை என முன்னதாக ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

இந்நிலையில் டிரம்ப் ஒரு டுவீட் இட்டிருந்தார். அதில் ‘பொய்யான ஓட்டுப்பதிவு அமெரிக்காவை சீரழிக்க நாங்கள் விடமாட்டோம்’ என அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.