- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
- கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!
- காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!
- பிரிட்டனில் இருந்து டில்லிக்கு கொரோனாவுடன் திரும்பிய பெண் ரயில் மூலம் ஆந்திராவிற்கு தப்பி ஓடியதால் அதிர்ச்சி!!
- கன்னியாஸ்திரி கொலை வழக்கு: பாதிரியாருக்கு ஆயுள் தண்டனை !!

அமெரிக்காவுக்கான முன்னாள் சிறிலங்கா தூதுவர் கைது
அமெரிக்காவுக்கான முன்னாள் தூதுவர் ஜாலியவிக்கிரமசூரிய நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுஅதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னைய ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவில்தூதுவராக இருந்த போது, 245,000 டொலர் தரகுப் பணம்பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சிறிலங்கா தூதரகத்தைப் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதே, இவர்இந்த தரகுப்பணத்தை பெற்றுக் கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்தப்பணத்தை ஜாலிய விக்கிரமசூரிய சிறிலங்காவில் வைப்புச் செய்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள ஜாலிய விக்கிரமசூரிய சிறிலங்காவின் முன்னாள் அதிபர்மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய உறவினராவார்.
நேற்று இவர் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக, வெளிநாடு செல்வதற்குநிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தடை விதித்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட ஜாலிய விக்கிரமசூரிய இன்று நீதிமன்றத்தில்முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.