அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 8 பேர் பலி

அமெரிக்காவில் உள்ள வணிக நிறுவனம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தற்கொலை செய்து கொண்டார். 8 பலியானதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின் இண்டியானாபொலிஸ் நகரில் உள்ள பெட்எக்ஸ் நிறுவனத்தில்ல் புகுந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் படுகாயமடைந்த பலர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவரும் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்தனர்.
துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து, அந்த பகுதிக்கு வரும் சாலைகள் அடைக்கப்பட்டு உள்ளன. மாற்று பாதையை பயன்படுத்தும்படி மக்கள்கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.