அமெரிக்காவிலுருந்து அல்கொய்தா பயங்கரவாதி இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டான்

அமெரிக்காவில் பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட அல்கொய்தா பயங்கரவாதி இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டான்.

ஐதராபாத்தை சேர்ந்தவர் முகமது இப்ராஹிம் ஜூபைர், 41, அமெரிக்காவில் இல்லினியோஸ் பல்கலை.யில் பொறியியல் படித்துள்ளான். 2006-ம் அமெரிக்காவின் ஒஹிகோ மாகாணத்தைச் சேர்ந்த பெண்ணை மணந்து கொண்டதன் மூலம் அந்நாட்டு நிரந்தர குடிமகன் உரிமை பெற்றான்.

இந்நிலையில் அரேபிய நாடுகளில் செயல்பட்டு வரும் அல்கொய்தா பிரிவு முக்கிய தலைவரிடம் தொடர்பு வைத்துக்கொண்டு, அந்த பயங்கரவாத அமைப்பிற்கு நிதி திரட்டியாக இவன் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டான். கோர்ட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 19-ம் தேதி சிறப்பு விமானம் மூலம் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு முகமது இப்ராஹிம் ஜூபைர் நாடு கடத்தப்பட்டான். தற்போது பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள கொரோனா பரிசோதனை மையம் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.