- விடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது !!
- நடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் அனுமதி
- ஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் !!
- கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்
- ‛ஸ்புட்னிக் வி' தடுப்பூசியை பயன்படுத்த நிபுணர் குழு பரிந்துரை

அமெரிக்காவின் முயற்சி – கொரோனா தடுப்பூசி சோதனை !!
கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க, அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி, சோதனை முயற்சியாக, முதன்முறையாக 43 வயது நிரம்பிய பெண் ஒருவருக்கு செலுத்தப்பட்டது. அதன் முடிவுக்காக உலகமே காத்துக்கொண்டிருக்கிறது.
கொரோனா வைரஸ் தொற்று, உலகெங்கும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை, 1.84 லட்சம் பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. 7,157 பேர் உலகெங்கும் உயிரிழந்துள்ளனர். சீனாவுக்கு அடுத்ததாக, ஐரோப்பிய நாடுகளில், இந்த வைரஸ் பாதிப்பு மிகத் தீவிரமாக உள்ளது. சீனாவில் 3,226 பேர், இத்தாலியில் 2,158 பேர், ஈரானில் 853, ஸ்பெயினில் 342 பேர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் தேசிய மருத்துவ மையம், கொரோனா வைரஸ் பாதிப்புக்கான தடுப்பூசி பரிசோதனையை துவக்கி உள்ளது. அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி, சோதனை முயற்சியாக, முதன்முறையாக தனிநபர் ஒருவருக்கு செலுத்தப்பட்டது. இரு குழந்தைகளுக்கு தாயான, 43 வயது நிரம்பிய ஜெனிபர் ஹேலர் என்பவருக்கு இத்தடுப்பூசி போடப்பட்டது. பல்வேறு கட்டங்களில், பரிசோதனை நடத்தப்பட்டு, இறுதியாக, தடுப்பூசி மருந்தை உறுதி செய்வதற்கு, 12 முதல் 18 மாதங்களாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.