அமெரிக்காவின் துரோகத்தனம் குறித்து தமிழ்நாட்டில் குமுறல்: உள்ளுரில் “ஒரே அமைதி”

பொதுவாகவே கடந்த காலங்களில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் நமது ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தபோது புலம்பெயர் தமிழர்கள்; குதூகலித்தார்கள். இலங்கையில் உள்ள தமிழ்த் தலைவரகள் ; “இதில் எமக்கு சம்பந்தம் இல்லை” என்று மௌனமாக இருந்தார்கள். ஆனால் தங்கள் பதவிகளை தக்க வைத்துக்கொண்டு சுகபோகங்கைள அனுபவித்தார்கள். ஆனால் இலங்கையில் பொதுத் தேர்தல் முடிவிற்று, சில தினங்களில் இலங்கைக்கு விஜயம் செய்த தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்கா பிரதி இராஜாங்கச் செயலளார் நிஷா பிஸ்வாலின் வருகை பற்றி எதனையும் தெரிவிக்காமல் இருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள், அவரைச் சந்தித்த பின்னர் கூட மௌனத்தை கடைப்பிடித்தார்கள். இதன் காரணம் தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக தெளிவாகத் தொடங்கியுள்ளது
சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்கா பிரதி இராஜாங்கச் செயலளார் நி~h பிஸ்வால் கூட இலங்கைக்கு எதிரான போர்க்குற்றம் தொடர்பில் விசாரணை செய்ய இலங்கை அரசாங்கம் முன்மொழிந்துள்ள உள்ளகப் பொறிமுறைக்கு ஆதரவு வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளமை குறித்து தமிழர் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தவே அங்கு சென்றார் என்பது இங்கு நன்கு புலனாகின்றது. மேற்படி அமெரிக்காவி;ன் முடிவு குறித்து இலங்கையில் இயங்கும் தமிழ் சிவில் சமூக அமையம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. எனினும் அமெரிக்காவின் இந்த அறிவிப்பு குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு “அதிர்ச்சியில் “ உள்ளதா? அல்லது அறியாமையில் தவிக்கின்றதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் படிக்க…