Posted on by netultim2

அமரர். விநாயகமூர்த்தி ஆனந்தராஜா
இருபதாம் ஆண்டு நினைவஞ்சலி
இதயத்தில் விடுதலை வேட்கையை சுமந்த வண்ணம்
பொருத வரும் எதிரிகளை விரட்டியடிக்க விரைந்தாய்
போரில் உன் நெஞ்சைத் துளைத்த சிங்களச் சன்னம் ஒரு
வரலாற்றை எழுதிச் செல்ல வாடினோம் உன் உறவுகள்
சுதந்திரத் தாகத்தோடு சென்று உதிரம் தமிழ் மண்ணை நனைக்க
வீர மரணத்தை விடுதலைக்கு இட்ட வித்தாகவே கணித்தோம்
வாடிய எம் கண்களில் நீர் நிறைந்து வடியவில்லை
தூரத்தில் மிகத் தொலைவில் உன்னை நாம் இழந்தோம்
தோழர்கள் உடனிருந்து உன்னை விதைத்தனர் அன்று
எங்கோ மண்ணில் வாழ்பவன் நீ ஒருநாள் இல்லம் வரவேண்டும்
எம் பொக்கிசமாய் உன்னை நாம் பூசித்து வாழ்வோம்