அமரர். வள்ளிநாயகி இராமலிங்கம் (குறமகள்)

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம்: 09-01-1933  – மறைவு: 15-09-2016

காங்கேசந்துறையை பிறப்பிடமாகவும், கனடாவை வதிப்பிடமாகவும், கோப்பாய் ஆசிரிய பயிற்சிக்கல்லூரியின் இளைப்பாறிய விரிவுரையாளருமான திருமதி. வள்ளிநாயகி இராமலிங்கம் (குறமகள்) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

பெற்றோருக்கு தலைமகளாய் பிறந்த அவர்தம் புகழை உங்கள் தமிழ் புலமை, பேச்சாற்றல் மற்றும் எழுத்தாற்றலால் உயர்த்தி பெருமைப் படுத்தினீர்கள். கணவனுக்கு அன்பு மனைவியாய், சேவகியாய், உற்ற தோழியாய் வாழ்ந்து இல்லறத்தை நல்லறமாக்கினீர்கள். பெற்ற பிள்ளைகளுக்கு பாசமிகு தாயாய் நல்லதொரு ஆசானாய் இருந்து நல்வழிப் படுத்தினீர்கள். உங்களிடம் கல்வி கற்ற மாணவர்களுக்கு ஒரு சேவை மனப்பான்மை மிகுந்த ஆசிரியராய் நல்லதொரு வழிகாட்டியாய் அவர்தம் முன்னேற்றத்துக்காய் பாடுபட்டிர்கள். வாழ்நாளில் இறுதிவரை நீங்கள் தமிழ்மொழி மேல் கொண்டிடுத்த பற்றுதல் காரணமாக கதை, கவிதை, கட்டுரை, பேச்சு, நாடகம், வானொலி, தொலைக்காட்சி என உங்களது படைப்புக்களை உங்கள் நினைவாக இவ்வுலகில் விட்டுச் சென்றுள்ளீர்கள். மரணம் உங்களை எங்களிடமிருந்து பிரித்து விட்டாலும், எங்கள் மனங்களில் இருந்து உங்கள் நிவைவுதனை பறித்திட முடியாது.
நிலையில்லா இவ்வுலகை விட்டு நீள்துயில் கொண்ட உங்களின் ஆத்மா சாந்தியடைய என்றும் இறைவனை பிராத்திக்கிறோம்.

என்றும் உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள்.