அமரர் மார்க்கண்டு கனகராஜா (உடுவில் கனடா)

ஓராண்டு நினைவஞ்சலி

தோற்றம்:- 13-02-1968 - மறைவு:- 28-03-2016
வையகத்து வாழ்வாங்கு வாழ்பவன்
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்
மண்ணுலகை விட்டுப்பிரிந்தாலும்
காலங்கள் பல கடந்து சென்றாலும்
துன்பமெனும் தோணியிலே
துடுப்பின்றி ஆலைமோதும் படகுபோல்
என்ன செய்வது எங்கு போவது
என்று திசை தெரியாமல் உன்னைப் பிரிந்து
ஓராண்டு வந்ததுவோ?

உன் நினைவால் நான் நிலைமாறிப் போனாலும்
பிறப்போடு இறப்பு இணைந்து
ஊனுருகி உளமுருகி வானோக்கி கை தொழுது
எனினும் உன் இழப்பை என் நெஞ்சம் ஏற்பதில்லையே
எம் வீட்டில் நீர் நட்ட மரங்கள் கூட
நிமிர்ந்து நின்று சாயுதே நீர் எங்கே போய் சென்றாய்?
உன் நினைவோடு எந்நேரமும் எந்த நிமிஷம் கூட
நினைக்காத நேரமில்லையே தம்பி !!!

உன் பிரிவால் துயருறும்

தகவல்

அக்கா தொடர்புகட்கு
416 829 2342