- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
Posted on by netultim2

அமரர் தியாகராஜா சிறிதரன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவு வரம் நேரமெல்லாம்
நீ இன்றி நானிருக்க ஏனிந்த விதியோ? என் கண்ணே!
நிலாவரையின் நீரூற்று வற்றிடுனும்-என் மகனே
உன் நினைவலைகள் வற்றாது கண்ணே….
எங்கெங்கோ பிறந்தோம் எப்படியோ இணைந்தோம்
காலமெல்லாம் கூடிவாழ்ந்து குதூகலித்திருப்போம்
கனவுகண்ட காதல் மனையாள் கையுதறி
எங்கு சென்றீர் ஐயா!
கண்ணுக்கு தெரியாது போனாலும் காற்றோடு கலந்து
எம்முடன் வாழ்கின்றீர் ஐயா!
கடவுளிடம் பேசுவதுபோல் பேசிக்கொண்டிருக்கின்றேன்
துணை நிற்பீர் ஐயா………….
எங்கள் இருவரினதும் கைபிடித்து நடந்தீர்
போகும் இடமெல்லாம் பாடம் சொல்லித் தந்தீர்
இட்டு நிரப்பமுடியாத வெற்றிடம்…
“அப்பா இருந்திருந்தால்…. என” ஏங்க வைத்தே
ஏன் எமைப்பிரிந்து சென்றீர் அப்பா…..
பாசத்தின் திருவிளக்கே அண்ணா
ஆறு ஆண்டுகள் போயினும்
அணைத்த கரங்களின் ஆறுதலும்
அன்பான வார்த்தைகளின் தேறதலும்
காலத்தால் அழியாது – அண்ணா
நினைவிழந்து போகாது
மண்ணை விட்டு போனாலும் எமது
மனங்களின் தீபச்சுடர் நீரே அண்ணா
உன்னதங்களின் உறைவிடமாய் உலா வந்தீர்
உற்றார் உறவு விட்டு
கூடிக்கழித்த நேசம் விட்டு
உலகை விட்டு எங்கே ஓடி மறைந்தீர் சிறீ ……
உற்றார், உறவினர்
உன் பிரிவால் உருகும்
அம்மா, மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள்
உறவுகள், நண்பர்கள்